நாட்டில் ஏற்ப்பட்டிருந்த பொருளாதார நெருக்கடியை ஓரளவு நிறைவு செய்து தேர்தல் ஒன்றை நடத்துவதற்கான பின்புலத்தை ஏற்படுத்தியதை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நினைவுகூர்ந்தார்.
இன்றைய தினம் கொழும்பு பல்கலைக்கழக கல்லூரியில் வாக்களித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அனைவரும் அமைதியாக செயற்பட்டு புதிய பயணத்தை ஆரம்பிக்க வேண்டுமென அவர் வலியுறுத்தினார்.
இன்றைய தேர்தல் நாட்டு மக்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும். தனக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமைதியானதும் சுதந்திரமானதுமான ஒரு தேர்தலை நடத்துவதற்கு சந்தர்ப்பம் கிடைத்தமை மகிழ்ச்சிக்குரியது என தெரிவித்தார்.