சுற்றுலா நியூசிலாந்து அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் தற்சமயம் இடம்பெற்று வருகிறது.
காலியில் இடம்பெறும் இந்த போட்டியில் தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி சற்று முன்னர் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 340 ஓட்டங்களை பெற்றுள்ளது.
அந்த அணி சார்பில் துடுப்பாட்டத்தில் Tom Latham அதிகபட்சமாக 70 ஓட்டங்களை பெற்றதுடன், Daryl Mitchell 57 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் Prabath Jayasuriya 04 விக்கெட்டுக்களையும், Ramesh Mendis 03 விக்கெட்டுக்களையும், Dhananjaya de Silva 02 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.
இலங்கை அணி முன்னதாக தமது முதலாவது இன்னிங்ஸில் 305 ஓட்டங்களை பெற்றுள்ளது.