17.5 பில்லியன் அமெரிக்க டொலர் கடனை மறுசீரமைப்பதற்காக சர்வதேச வர்த்தக கடன் வழங்குநர்களுடன் இலங்கை உடன்படிக்கை ஒன்றை எட்டியுள்ளது.
அதனூடாக குறித்த கடன் தொகையின் தற்போதைய மதிப்பில் இருந்து 40.3% தள்ளுபடி பெறுவது சிறப்பம்சமாகும்.
இதன் மூலம் இலங்கைக்கு குறிப்பிடத்தக்க கடன் நிவாரணம் கிடைக்கும் எனவும், வட்டிக் கொடுப்பனவுகளை குறைப்பதன் மூலம் நாட்டின் நிதி ஸ்திரத்தன்மை பலப்படுத்தப்படும் எனவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.