ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் தேசிய பாதுகாப்பு சபை உறுப்பினர்களுக்கு இடையில் இன்று (19) கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது, 2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான பாதுகாப்பை உறுதி செய்தல், தேர்தல் ஆணையக்குழுவிற்கு ஆதரவு அளிப்பது, வேட்பாளர்கள் மற்றும் வாக்குச் சாவடிகளைப் பாதுகாப்பது, தேர்தலுக்குப் பிந்தைய சட்டம் மற்றும் ஒழுங்கை அன்றாட வாழ்க்கைக்கு இடையூறு விளைவிக்காமல் பராமரிப்பது குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.