ஆக்ராவில் உள்ள உலக அதிசயமான தாஜ்மஹாலை பார்ப்பதற்கு உலகம் முழுவதிலும் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் ஆண்டுதோறும் வருகை தருகின்றனர்.
ஆக்ராவில் அண்மையில் பெய்த கனமழையால் தாஜ்மஹாலில் நீர் கசிவு ஏற்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தாஜ்மஹாலின் மேற்கூரையில் செடி வளர்ந்திருக்கும் புகைப்படத்தை சுற்றுலா பயணி ஒருவர் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்திருந்தார்.
இதனையடுத்து, உலக அதிசயமான தாஜ்மஹால் ஒழுங்காக பராமரிக்கப்படவில்லை என்று நெட்டிசன்கள் விமர்சனம் செய்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளித்த தொல்லியல்துறை கண்காணிப்பாளர் ராஜ்குமார் படேல், “கடந்த ஆகஸ்ட் மாதமே தூணில் வளர்ந்திருந்த செடிகள் அகற்றப்பட்டது.
இந்த செடி 15 நாட்களுக்கு முன்பு உருவாகியுள்ளது. இது விரைவில் நீக்கப்படும்” என்று தெரிவித்தார்.