உணவு விசமடைந்ததில் 500க்கும் அதிகமானோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பொலன்னறுவை எலஹெர பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகமுண பகுதியில் தனியார் தொழிற்சாலையொன்றில் கடமையாற்றும் ஊழியர்களே இவ்வாறு உணவு ஒவ்வாமையால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அத்தன கடவல மற்றும் பகமுண பிரதேச வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.