வவுனியா ஓமந்தை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். மோட்டார் சைக்கிளொன்று சைக்கிளுடன் மோதியதில் விபத்து நேர்ந்துள்ளது.
நேற்றிரவு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இரண்டிலும் பயணித்தவர்கள் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த 46 வயது மற்றும் ஓமந்தையைச் சேர்ந்த 48 வயதுடையவர்களே விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
அதிக வேகத்தில் மோட்டார் சைக்கிள் பயணித்தமையே விபத்திற்கு காரணமென தெரியவந்துள்ளது.