காலி – மாத்தறை பிரதான வீதியின் மிதிகம பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 38 வயதான அவர் வர்த்தகர் என தெரியவந்துள்ளது.
மீன் கொள்வனவு செய்ய வந்த மேலும் இருவர் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தள்ளனர். அவர்கள் சிகிச்சைக்கென மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
அஹங்கம பகுதியில் கடந்த ஓகஸ்ட் மாதம் 4ம் திகதி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த நபரின் சகோதரரே குறித்த தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.