லெபனானில் மீண்டும் தொலைத்தொடர்பு கருவிகள் வெடித்ததில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 450 பேர் காயமடைந்துள்ளனர். ஹிஸ்புல்லா அமைப்பின் ஆதரவாளர்கள் பயன்படுத்தி வங்கி வோக்கி டோக்கி தொலைத்தொடர்பு கருவிகள் திடீரென வெடிக்க ஆரம்பித்ததில் இந்த உயிர்ச்சேதங்கள் ஏற்ப்பட்டுள்ளன.
குறித்த கருவிகளை வைத்திருந்தவர்கள் பொது இடங்களில் அதிகமாக இருந்துள்ளதால் உயிரிழப்புகள் மற்றும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக லெபனான் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்தி வந்த பேஜர் என்ற தொலைத்தொடர்பு சாதனங்களை வெடிக்க வைப்பதற்கான சதி இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. இது இஸ்ரேலின் செயற்பாடு என ஹிஸ்புல்லா குற்றம் சுமத்தியுள்ளது. எனினும் இஸ்ரேல் குறித்த குற்றச்சாட்டை நிராகரித்துள்ளது.