நாட்டின் 9வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு நாளை மறுதினம் இடம்பெறவுள்ளது. காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை 13,421 வாக்களிப்பு மத்திய நிலையங்களில் வாக்கெடுப்பு இடம்பெறுமென தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய பிரச்சார நடவடிக்கைகள் அனைத்தும் நேற்று நள்ளிரவு 12 மணியுடன் நிறைவுக்கு வந்தது. அதனையடுத்து வாக்கெடுப்பு இடம்பெறும் வரையான காலம் அமைதிக்காலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த காலப்பகுதியில் பிரச்சார செயற்பாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளுதுடன் அதனை மீறி செயற்படும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு பொலிசாருக்கு அதிகாரமுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தேர்தலை நடத்துவதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் அனைத்தும் நிறைவுக்கு வந்துள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.