ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்காக தமது சொந்த ஊர்களுக்கு செல்பவர்களின் நலன்கருதி விசேட பஸ் சேவை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய தூர சேவைகளுக்கென மேலதிக பஸ் சேவைகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
இதேவேளை தனியார் பயணிகள் பஸ் சேவை ஊழியர்கள் வாக்களிக்கவுள்ளதால் அன்றைய தினம் மேலதிகமாக தனியார் பஸ்கள் சேவையில் ஈடுபடமாட்டாதெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.