மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும் வடமத்திய மற்றும் தென் மாகாணங்களிலும் காற்றானது 40-45 கிலோமீற்றர் வேகத்தில் அதிகரித்து வீசுமென வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.