150 மில்லியன் ரூபா பெறுமதியான இடத்திற்கு போலி ஆவணங்களை தயாரித்து சொத்துக்களை கையகப்படுத்திய சம்பவம் தொடர்பில் சட்ட நடவடிக்கைகளை எடுக்கும் வகையில் பெண் சந்தேக நபர் ஒருவரை கைதுசெய்வதற்கு பொலிசார் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர்.
குறித்த பெண் தன்னை வேறு ஒரு நபராக அடையாளப்படுத்தி போலி காணி உரிமத்தில் கையெழுத்துப் பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடு தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆர்மபித்துள்ளது.
பெண் சந்தேக நபரின் புகைப்படத்தை பொலிஸ் திணைக்களம் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளது. இதற்கமைய குறித்த பெண் தொடர்பில் தகவல் அறிந்தவர்கள் கீழுள்ள தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து அறிவிக்குமாறு பொலிசார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வணிக குற்ற விசாரணை பிரிவு – 0112 434 504
குற்றப் புலனாய்வு திணைக்களம் – 0112 422 176