அனுராதபுரம் பிரதான ரயில் நிலையத்தில் மோட்டார் சைக்கிள் தரிப்பிடத்திலிருந்த மோட்டார் சைக்கிள் தலைக்கவசம் மற்றும் பைக் ஜெக்கட் ஒன்று களவாடப்பட்ட சம்பவத்தை முன்னிலையாக கொண்டு இன்று காலை முதல் ரயில் நிலையத்தின் கட்டுப்பாட்டாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இதனால் வடக்கு ரயில் சேவைகளில் பாதிப்பு ஏற்ப்பட்டது.
மாணவர்கள், சுற்றுலாப் பயணிகள், பாதுகாப்பு பிரிவினர் உள்ளிட்ட பலர் அசௌகரியத்திற்கு முகம்கொடுத்தனர். எவ்வாறெனினும் ரயில் நிலைய கட்டுப்பாட்டாளர்கள் சங்கத்துடன் இன்று மாலை இடம்பெற்ற கலந்துரையாடலையடுத்து வேலைநிறுத்தம் கைவிடப்பட்டுள்ளது.