உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. வடகொரியாவின் இந்த நடவடிக்கையை அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன.
ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்கா தலைமையில் வடகொரியாவின் மீது புதிய பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டன. எனினும், அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளைப் பொருட்படுத்தாமல் வடகொரியா அவ்வப்போது ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது.
இந்நிலையில், வடகொரியா இன்று மீண்டும் பாலிஸ்டிக் ஏவுகணையை பரிசோதனை செய்தது என ஜப்பான் நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.
அணு ஆயுதப் போருக்கு தயார் என வடகொரிய அதிபர் அறிவித்த சில தினங்களுக்கு பின்னர் தொடர்ந்து ஏவுகணை சோதனையை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.