நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் வேண்டும் வகையில் கடந்தகால சம்பவங்களுடன் தொடர்புடைய காணொளிகளை சமூக ஊடகத்தில் பரப்புதல் மற்றும் அதனை பதிவேற்றம் செய்யும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென பொலிஸ் ஊடக பிரிவு அறிவித்துள்ளது.
அவ்வாறான காணொளிகள் பரப்பும் சம்பங்கள் பல பதிவாகியுள்ளன. உதாரணமாக ஊரடங்குச் சட்டம் நாட்டில் அமுலில் இருந்த காலப்பகுதியில் எடுக்கப்பட்ட காணொளிகள், வாகனங்களை சிலர் சோதனையிடுதல் போன்ற காணொளிகள் வெளியாகியுள்ளதுடன் அவை நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என பொலிசார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இது பொதுமக்களை தவறாக வழிநடத்தச் செய்யும் செயற்பாடு எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர். இதுபோன்ற விடயங்களில் ஈடுபடுவதை மக்கள் தவிர்க்க வேண்டுமெனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.