ஹம்பாந்தோட்டையிலிருந்து மஹியங்கணை வரை மீன் ஏற்றிச்சென்ற சிறியரக லொறியொன்று கதிர்காமம் – செல்லக்கதிர்காமம் பிரதான வீதியின் மயிலகம பகுதியில் வைத்து விபத்துக்குள்ளானது. இன்று அதிகாலை விபத்து இடம்பெற்றுள்ளது.
லொறியின் சாரதிக்கு நித்திரை ஏற்பட்டமையே விபத்திற்கு காரணமென பொலிசார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் லொறியின் சாரதி மற்றும் உதவியாளர் காயமடைந்த நிலையில் கதிர்காமம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக ஹம்பாந்தோட்டை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.