உரிய விசாரணைகளின் பின்னர் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையின் முதல் வினாப்பத்திரத்திலிருந்து 3 கேள்விகளை நீக்குவதற்கு பரீட்சைகள் திணைக்களம் நடவடிக்கைளை எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பரீட்சையின் முதல் வினாப்பத்திரத்திலுள்ள 3 வினாக்களை ஒத்த வினாக்கள் உள்ளடக்கிய மாதிரித்தாள் ஒன்றை ஆசிரியர் ஒருவர் சமூக ஊடகத்தில் பதிவேற்றம் செய்ய சம்பவத்தையடுத்தே இந்த தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.
அனுராதபுரம் பகுதியிலுள்ள பாடசாலையொன்றின் அதிபர் உள்ளிட்ட ஆறு ஆசிரியர்கள் இந்த விடயம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.