மியன்மாரை தாக்கிய யாகி சூறாவளியையடுத்து ஏற்பட்ட பாரிய வெள்ளப்பெருக்கினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 200ஆக உயர்வடைந்துள்ளது. மேலும் 80 பேர் காணாமல் போயுள்ளனர்.
பல கிராமங்கள் மண்சரிவும் வெள்ள அபாயத்தினால் அழிவடைந்துள்ளன. மீட்பு பணிகள் தொடரும் நிலையில் பலி எண்ணிக்கை 200ஐ கடந்துள்ளது. ஆயிரக்கணக்கான ஏக்கர் பயிர் நிலங்களும் அழிவடைந்துள்ளன.
வெள்ளத்தினால் சுமார் அரை மில்லியனுக்கும் அதிகமான மியன்மார் மக்கள் அவசர உதவிகளை எதிர்பார்த்திருப்பதாக உலக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. உணவு, தற்காலிக கூடாரங்கள், குடிநீர் உள்ளிட்டவை தேவைப்படுகின்றன.
இதேவேளை மியன்மார் உட்பட வியட்நாமின் வடக்கு மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளிலும் யாகி சூறாவளியினால் அனர்த்தங்கள் ஏற்பட்டுள்ளன.