வடக்கில் மாகாண சபை முறை அமுலாகவதை முன்னாள் தலைவர் ஆர்.பிரேமதாச கடுமையாக எதிர்த்திருந்த நிலையில் தற்போது வடக்கு மக்கள் அவரது மகன் சஜித் பிரேமதாச ஆதரித்து ஏமாற்றத்தையே சந்திக்க நேரிடுமென எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
22ம் திகதி சஜித் பிரேமதாச ஜனாதிபதியானால், அவருக்கு வாக்களித்த தமிழ் மக்களுக்கு ஏமாற்றம் காத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வாக்குறுதிகளை விடவும் மேலதிகமாக மக்களுக்கு நிதி நிவாரணங்களை வழங்குவதாக சஜித் பிரேமதாச பொதுக் கூட்டங்களில் வாக்குறுதி வழங்குகின்றார்.
ஜனாதிபதியாக பதவியேற்றால், அவர் எங்கிருந்து அதற்கான நிதியை திரட்டுவார் என எஸ்.பி.திஸாநாயக்க கேள்வி எழுப்பியுள்ளார். தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா நாளாந்த சம்பளத்தை பெற்றுக்கொடுப்பதே ஜனாதிபதி ரணிலின் விருப்பமாக இருந்தது.
எனினும் முதலாளிமார் சம்மேளனம் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. வீடமைப்பு அமைச்சராக இருந்த சஜித் ஒரு வீட்டை அங்கு கட்டியுள்ளாரா? இந்த நாட்டின் நிலைப் பற்றி மக்கள் அறிந்துகொள்ள வேண்டும்.
எரிபொருள், எரிவாயு, பால்மா, என எதனையும் இறக்குமதி செய்ய நிதி இருக்கவில்லை. மக்கள் வீதியில் இறங்கி போராடினார்கள். சிங்களம், தமிழ், முஸ்லிம் என பாகுபாடு பார்த்து பொருளாதார திட்டங்களை ஜனாதிபதி ரணில் அறிமுகப்படுத்தவில்லை.
மாறாக அவர் நாட்டு மக்களின் நலன்கருதியே செயற்ப்பட்டார். இதனால் அவர் மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட வேண்டுமென எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.