நாட்டில் பதிவாகும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 38088 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
அவர்களில் அதிகமானவர்கள் அதாவது 9451 பேர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். அத்துடன் குறித்த காலப்பகுதியில் 17 டெங்கு மரணங்கள் இடம்பெற்றுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.
இடைக்கிடையே மழையுடன் கூடிய வானிலை நிலவுவதால் சுற்றுச் சூழலை தொடர்ச்சியாக சுத்தமாக வைத்திருப்பது அவசியமாகும். டெங்கு நுளம்புகள் பெரும் வகையில் சூழலை வைத்திருக்க வேண்டாமென சுகாதார பிரிவு பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.