ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகளை இதுவரை கிடைக்கப்பெறாதவர்கள் நாளைய தினம் முதல் தேர்தல் அன்று வரை தமக்குரிய பிரதேசத்தின் தபால் அலுவலகங்களில் அவற்றை பெற்றுக்கொள்ள முடியுமென உப தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஜனாதிபதி தேர்தலுக்கென இதுவரை 97 வீதமான வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 3ம் திகதி வாக்காளர் அட்டை விநியோகம் ஆரம்பிக்கப்பட்டதுடன் கடந்த 14ம் திகதி வரை குறித்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டதாக உப தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்.