சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இருவர் சுண்டிக்குளம் கடற்பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர். அதிக வெளிச்ச மின் விளக்குகளை பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் அவ்ரகள் ஈடுபட்டுள்ளனர்.
மீனவர்கள் பயணித்த இரு டிங்கி படகுகள் உட்பட சட்டவிரோத மீன்பிடி உபகரணங்கள் சிலவற்றையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
சந்தேக நபர்கள் 40 மற்றும் 41 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது. மேலதிக விசாரணைகளுக்காக அவர்கள் யாழ் கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.