ஐ.சி.சி யின் கடந்த ஓகஸ்ட் மாதத்திற்கான சிறந்த வீராங்கணையாக இலங்கை மகளிர் கிரிக்கட் அணியின் ஹர்சிதா மாதவீ தெரிவாகியுள்ளார்.
அண்மையில் அயர்லாந்துடன் இடம்பெற்ற தொடரில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் ஐ.சி.சி யின் ஓகஸ்ட் மாத சிறந்த வீராங்கணை பரிந்துரையில் இடம்பிடித்தார். அவருடன் அயர்லாந்து மகளிர் அணியின் இரு வீராங்கணைகள் தெரிவுக்கென பரிந்துரைக்கப்பட்டிருந்தனர்.
இதில் ஹர்ஷிதாவுக்கு கிடைக்கப்பெற்ற அதிக வாக்குகளுக்கமைய அவர் தெரிவானார்.