கிளப் வசந்தவின் கொலையடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேக நபர் தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவர் அழுத்கம தர்கா நகரில் வசிக்கும் 24 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
கிளப் வசந்தவின் கொலைக்கென பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி ரவைகளில் KPI என்ற எழுத்துக்களை பதிவு செய்த செயற்பாடு குறித்த சந்தேக நபரினால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். வர்த்தக நிலையமொன்றில் உதவியாளராக செயற்படும் அவர் கடுவலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.