உடல் ரீதியிலான தண்டனையை தடை செய்யும் சட்டத்தை விரைவில் கொண்டுவருவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார்.
“அனைத்து வடிவங்களிலுமான உடல் ரீதியான தண்டனையை தடைசெய்யும் வகையில் தண்டனைச் சட்டம் மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான முன்மொழிவுக்கு அமைச்சர்கள் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
குழந்தைகள் பாதுகாப்பு ஆர்வலர்களின் 20 ஆண்டுகளுக்கும் மேலான முயற்சிகளுக்குப் பிறகு இந்த மைல்கல் சாதனை கிடைத்துள்ளது. அரசிதழில் வெளியிடப்பட்டதும், இறுதி ஒப்புதலுக்காக இந்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும், ”என்று அவர் தனது சமீபத்திய எக்ஸ் வலைத்தளத்தில் கூறினார்.