பல்லேகல திறந்தவெளி சிறைச்சாலையில் கடந்த 11 ஆண்டு காலமாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் தப்பிச் சென்றுள்ளதாக பல்லேகல பொலிஸார் தெரிவித்தனர்.
பொரளை, பேஸ்லைன் வீதி பிரதேசத்தைச் சேர்ந்த 54 வயதுடைய கைதியே தப்பிச் சென்றுள்ளார்.
இந்த கைதி சிறைச்சாலையின் பணிகளில் ஈடுபட்டிருந்தபோது மிகவும் சூட்சுமமான முறையில் சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தப்பிச்சென்ற கைதி போதைப்பொருளுக்கு அடிமையானவர் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பல்லேகல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.