அதிவேக வீதியின் பேலியகொடையில் வெளியேறும் பகுதியிலுள்ள நிலத்தடி மின் கம்பிகளை அறுத்து அவற்றை களவாடிய நபர் ஒருவரை பொலிசார் கைதுசெய்துள்ளனர்.
அதிவேக வீதியில் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்ட பாதுகாப்பு அதிகாரிகள் சந்தேக நபரை கைதுசெய்து வத்தளை பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர். அவரிடமிருந்து 14 அடி நீளமுள்ள இரண்டு செப்பு கேபிள்கள் மற்றும் கேபிள்களை வெட்டுவதற்கு பயன்படும் ஆயுதங்கள் என்பன மீட்கப்பட்டன.
சந்தேக நபர் களனி – வனவாசல பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.