யுக்ரைனின் இரண்டாவது மிகப்பெரிய நகரமான கார்கிவ் மீது ரஷ்யா நடத்திய குண்டுத்தாக்குதலில் 42 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். மக்கள் குடியிருப்பு தொகுதியை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அல்-ஜஷீரா செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
குடியிருப்புத் தொகுதியின் 10வது மாடியில் குண்டு வந்து விழுந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவர்களில் சிறுவர்களும் உள்ளடங்குவதாக கார்கிவ் நகர மேயர் தெரிவித்துள்ளார். ரஷ்யாவிடமிருந்து தமது மக்களை பாதுகாக்க மேற்குலக நாடுகள் தமக்கு ஆயுத உதவிகளை வழங்க வேண்டுமென யுக்ரைன் ஜனாதிபதி வொல்திமிர் ஷெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.