மஹவ பகுதியிலிருந்து கோட்டை நோக்கி பயணித்த அலுவலக ரயில் ஒன்று ராகம ரயில் நிலையத்திற்கு அண்மையில் தடம்புரண்டுள்ளது. இதனால் பிரதான ரயில் மார்க்கத்துடனான போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தினால் ரயில் மார்க்கத்திற்கும் சேதம் ஏற்ப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. ராகம – மாபாகே ரயில் கடவைக்கு அண்மித்த பகுதியில் வாகன நெரிசலும் ஏற்ப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.