அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் முன்னாள் ஜனாதிபதி டொனால் ட்ரம்ப்பை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. எனினும் அவரின் பாதுகாவலர்கள் ட்ரம்ப்பை பாதுகாப்பாக அங்கிருந்து மீட்டுச் சென்றுள்ளதாக அமெரிக்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
புளோரிடாவிலுள்ள கொல்ப் மைதானத்தில் வைத்து இந்த முயற்சி இடம்பெற்றுள்ளது. அங்கிருந்து AK-47 ரகத்தைச் சேர்ந்த துப்பாக்கி ஒன்றையும் புலனாய்வு பிரிவினர் மீட்டுள்ளனர். துப்பாக்கிப் பிரயோகத்தை நடத்த வந்தவர், அங்கிருந்து தப்பிச் சென்ற நிலையில் அவரை பின்தொடர்ந்த பொலிசார் சந்தேக நபரை கைதுசெய்துள்ளனர்.
சந்தேக நபர் ரயன் வெஸ்லி என்ற 50 வயதுடையவர் என பொலிசார் அடையாளம் கண்டுள்ளனர்.
இந்நிலையில் ட்ரம்ப் பாதுகாப்பாக இருப்பதாக அவரது கட்சியின் எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. பென்சில்வேனியாவில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தின் போது ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
சிறிய காயங்களுடன் மயிரிழையில் ட்ரம்ப் உயிர்தப்பினார். குறித்த சம்பவம் இடம்பெற்று 2 மாதங்களில் மீண்டும் அவர் மீது துப்பாக்கிச் சூட நடத்த முயற்சி இடம்பெற்றுள்ளமை அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.