மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே இடியுடன் கூடிய மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சில பகுதிகளில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகரித்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது. வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளையில் சில பகுதிகளில் சிறிதளவு மழை பெய்யலாம்.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை , மொனராகலை , திருகோணமலை மாவட்டங்களிலும் காற்றானது 40-50 கிலோமீற்றர் வேகத்தில் வீசுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.