இன்று முஸ்லிம்கள் இஸ்லாத்தின் இறுதி இறைதூதரான நபி முஹம்மத் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் பிறந்த தினமான மீலாதுன் நபி விழாவைக் கொண்டாடுகிறார்கள்.
மீலாது நபி இ நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிறந்தநாளை அடிப்படையாக வைத்து உருவாக்கப் பட்டுள்ளது.ரபீஅல் அவ்வல் மாதம் 12 ஆம் தேதி அன்று தான் நபிகள் நாயகம் பிறந்தார்கள் எனவும் இரசூலுல்லா பிறந்த நாளை கொண்டாடுவது சிறப்பிற்குரிய காரியம் என்ற வகையில் இந்த மீலாது விழா கொண்டாடப் படுகிறது.
மீலாத் விழாவினுடைய அடிப்படை நோக்கம்இ நபிகள் நாயகம் சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்களுடைய பிறப்பின் அற்புதங்களை எடுத்து கூறுவதும் அதன் மூலமாக அவர்களை கண்ணியப்படுத்துவதும் அவர்களுடைய சிறப்பம்சங்களை எடுத்து கூறுவதும் மக்களை ஈமானின் பக்கமும் இஸ்லாத்தின் பக்கமும் உணர்வூட்டுவதும் அவர்களின் நற்குணங்களை அறிந்து கொள்ளுவதும் மற்றும் அவர்கள் மீதுள்ள அன்பை வெளிப்படுத்துவதும் அல்லாஹ்வுடைய அருட்கொடைகளை சொல்லி காட்டுவதும் மக்களுக்கு உணவளித்தல் போன்ற நல்ல அமல்களை செய்வதும் அதன் மூலம் நன்றியை வெளிப்படுத்துவதும் ஆகும் என்று இந்த பிறந்த நாள் விழா கொண்டாடும் மக்கள் கூறுகின்றனர்.