கண்டியின் பல பகுதிகளில் செப்டம்பர் 28 முதல் இரண்டு நாட்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
அதற்கமைய, இம்மாதம் 28ஆம் திகதி சனிக்கிழமை பகல் 1 மணி முதல் நீர் விநியோகம் தடை செய்யப்பட்டு, 30ஆம் திகதி மாலை 6 மணிக்கு நீர் விநியோகம் வழமைக்குத் திரும்பும் என சபை தெரிவித்துள்ளது.
எனவே, அப்பகுதிகளில் உள்ள நுகர்வோர், இந்த இரண்டு நாட்களிலும் தங்கள் தேவையை நிர்வகிப்பதற்கு போதுமான தண்ணீரை சேமித்துவைக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.