லெபனானில் தாக்குதல்களை அதிகரித்தால் பாரிய இழப்புகளை இஸ்ரேல் சந்திக்க நேரிடுமென ஹிஸ்புல்லாஹ் எச்சரிக்கை விடுத்துள்ளது. அத்துடன் இஸ்ரேலின் வடக்கு பகுதியிலுள்ள நூற்றுக்கணக்கான மக்கள் இடம்பெயர வேண்டி ஏற்படுமெனவும் ஹிஸ்புல்லாஹ் அமைப்பு தெரிவித்துள்ளது.
இஸ்ரேலின் வடக்கு எல்லையிலுள்ள லெபானன் மீது வலுவான மற்றும் பரந்த படை நடவடிக்கைகளை ஆரம்பிக்க இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகூ திட்டமிட்டுள்ளதாக குறித்த அமைப்பின் உப தலைவர் நையிம் குவாசிம் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் – லெபனான் எல்லைகளில் நாளாந்தம் பரஸ்பர தாக்குதல்கள் இடம்பெற்ற வண்ணமுள்ளன. இரு தரப்பிலும் பாரிய உயிர்ச்சேதங்கள் ஏற்ப்பட்டுள்ளன.
இந்நிலையில் யுத்தத்திற்கு செல்வதற்கான எந்தவொரு நோக்கமும் ஹிஸ்புல்லாஹ் அமைப்பிற்கு இல்லையெனவும் எனினும் இஸ்ரேலின் நடவடிக்கைகளால் அது பயனற்ற ஒன்றாக மாறியுள்ளதாக நையிம் குவாசிம் குறிப்பிட்டுள்ளார்.