ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் வெள்ள அபாயம் ஏற்ப்பட்டுள்ளது. மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் கடந்த சில நாட்களாக தொடரும் மழையுடன் கூடிய வானிலையால் வெள்ள அனர்த்தம் ஏற்ப்பட்டுள்ளது.
செக் குடியரசு, போலாந்து, ஒஸ்ட்ரியா, ஸ்லோவாகியா, ஹங்கேரி உள்ளிட்ட நாடுகள் வெள்ள அபாயத்திற்கு முகம்கொடுத்துள்ளன. ரொமேனியாவில் வெள்ளப் பெருக்கினால் 4 மரணங்கள் பதிவாகியுள்ளன.
போலாந்திலும் ஆறுகள் பெருக்கெடுத்துள்ளதால் பலர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.