நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினம் இடைக்கிடையே மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்கரமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யலாம்.
மேல் , சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் சில பகுதிகளில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகரித்த மழைவீழ்ச்சி பதிவாகும். ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளையில் இடைக்கிடையே மழை பெய்யும்.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகள் உட்பட வடக்கு, வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை, மொனராகலை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் காற்றின் வேகமானது 40-50 கிலோமீற்றராக வீசுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.