அனைத்து அறநெறி பாடசாலை ஆசிரியர்களுக்கும் 2500 ரூபா சீருடை கொடுப்பனவை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இது தொடர்பான பிரேரணையை பௌத்த விவகார , கலாசார அலுவல்கள் அமைச்சு முன்வைத்திருந்தது.
அடுத்த ஆண்டிலிருந்து கொடுப்பனவை வழங்க அமைச்சரவை இணங்கியுள்ளது. அறநெறி பாடசாலை ஆசிரியர்களின் சேவையை ஊக்குவிக்கும் வகையில் வருடாந்த ஆசிரியர் கொடுப்பனவாக 5000 ரூபா தற்போது வழங்கப்பபடுகிறது.
சீருடை கொடுப்பனவுடன் 7500 ரூபா அடுத்த ஆண்டிலிருந்து வழங்கப்படுமென அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.