ஐக்கிய மக்கள் சக்தி ஒருபோதும் வன்முறையை கையாண்டதில்லையென ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அன்று பேரழிவுகளுக்கு காரணமாக இருந்தவர்கள் இன்று அதிகாரத்தை கையில் எடுக்க முயற்சிக்கின்றனர்.
ஹபராதுவ பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்ட போதே சஜித் பிரேமதாச இதனை குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் சுகாதாரத் துறையை உயர் நிலைக்கு கொண்டு வருவதற்கு தமது அரசாங்கத்தின் கீழ் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.