4வது தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகளில் 2ம் இடத்தைப் பெற்றுக்கொண்ட இலங்கை குழுவினர் இன்று தாயகம் வந்தனர். 9 தங்கம், 9 வெள்ளி மற்றும் 17 வெண்கலப் பதக்கங்களை இலங்கை வீர வீராங்கணைகள் வென்றமை குறிப்பிடத்தக்கது.
போட்டிகளில் மொத்தமாக 35 பதக்கங்களை அவர்கள் வென்றனர். இந்தியாவின் சென்னை நகரில் 4வது தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகள் இடம்பெற்றன. இதற்போது 5 சாதனைகளையும் இலங்கை வீரர்கள் பதிவு செய்தமை விசேட அம்சமாகும்.
100 மீற்றர், 100 மீற்றர் தொடர் ஓட்டம் மற்றும் 200 மீற்றர் , 800 மீற்றர் உட்பட உயரம் பாய்தல் உள்ளிட்ட போட்டிகளில் குறித்த சாதனைகள் நிலைநாட்டப்பட்டன. இன்று காலை அவர்கள் தாயகம் வந்தனர்.
அவர்களை வரவேற்பதற்காக விளையாட்டு சங்கங்களின் அதிகாரிகள் உட்பட விளையாட்டு வீரர்கள் கல்வி கற்ற பாடசாலைகளின் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களும் விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்தனர்