இங்கிலாந்திலுள்ள மிகப்பெரிய பாடசாலையான ஒர்மிஸ்டனில் கையடக்க தொலைபேசி பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய குறித்த பாடசாலைக் கிளைகள் 42 இடங்களில் உள்ள நிலையில் 35000 மாணவர்கள் அதில் கல்வி கற்கின்றனர்.
கற்றல் செயற்பாடுகளின் போது கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் உளச் சுகாதாரத்தை மேம்படுத்துவதே இதன் நோக்கமாகும்.
இந்த தடை தீர்மானத்தை எடுப்பதற்கு முன்னர் பெற்றோர்களிடமும் கருத்துக்கள் பெறப்பட்டுள்ளன. எவ்வாறெனினும் சில பெற்றோர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.