சட்டவிரோதமாக நாட்டிற்கு எடுத்துவரப்பட்ட ஒரு தொகை வெளிநாட்டு சிகரெட்டுக்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளது.
பயணி ஒருவரின் பையினை சோதனை செய்த போது அவை கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விமான நிலையத்தின் வருகை தரும் முனையத்திலுள்ள சுங்க அதிகாரிகள் சந்தேக நபரை கைதுசெய்தனர்.
கொழும்பு 10 பகுதியைச் சேர்ந்த குறித்த சந்தேக நபர் டுபாயிலிருந்து இலங்கைக்கு வருகை தந்துள்ளார். அவரது பயணப் பையில் 120,400 சிகரெட்டுக்கள் காணப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.