எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதிலுமுள்ள மதுபான விற்பனை நிலையங்கள் மூடப்படுமென கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய செப்டம்பர் 21 மற்றும் 22ம் திகதிகளில் மதுபானசாலைகள் மூடப்படவுள்ளதாக திணைக்களத்தின் ஆணையாளர் எம்.ஜே.குணசிரி தெரிவித்துள்ளார்.