இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் பதவியில் இருந்து ஜனாதிபதி சட்டத்தரணி கௌசல்ய நவரத்ன உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இராஜினாமா செய்துள்ளார்.
சங்கத்தின் ஐந்து பேர் கொண்ட குழுவின் அறிக்கையைத் தொடர்ந்து, அதன் தலைவர் கௌசல்யா நவரத்னவை பதவி விலகுமாறு ஏகமனதாக அழைப்பு விடுக்கப்பட்டது.
ஜெயிகா (JAICA) நிதி சர்ச்சையை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட குழு நவரத்ன, BASL மற்றும் JICA இடையேயான ஒப்பந்தத்தை கையாள்வதில் வெளிப்படைத்தன்மையுடன் செயல்படத் தவறியமை தலைவராக அவர் மீது வைத்திருந்த நம்பிக்கையை மீறுவதாகக் கண்டறிந்ததை அடுத்து இந்த இராஜிமானா வந்துள்ளது.