தனது பிள்ளையை பாடசாலைக்கு அழைத்துச் சென்ற மனைவியை, கணவன் கட்டையால் அடித்துக் கொலை செய்துள்ள சம்பவமொன்று மாத்தறையில் இடம்பெற்றுள்ளது. இன்று காலை மாத்தறை-தெய்யந்தர-அத்தபத்துகந்த சந்திக்கு அருகில் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தெய்யந்தர, பரபாமுல்ல பகுதியில் வசித்து வந்த, 42 வயதுடைய ஒரு பிள்ளையின் தாய் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். இன்று காலை தனது பிள்ளையை பாடசாலைக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்த போது, வீதியில் மறைந்திருந்த கணவன், தடியால் மனைவியை தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொலை செய்யப்பட்ட மனைவிக்கும் அவரது கணவருக்கும் இடையே ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, அவர் சில காலமாக தனது தாய் வீட்டில் தங்கியிருந்து வந்துள்ளதாக தெரியவருகிறது. குடும்பத் தகராறு காரணமாக கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர் தப்பிச் சென்றுள்ள நிலையில் அவரை கைதுசெய்வதற்கான விசாரணைகளை தெய்யந்தர பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.