ஓய்வு வயதெல்லையை அதிகரிப்பதற்கு சீனா தீர்மானித்துள்ளது. 1950ம் ஆண்டுக்கு பின்னர் முதற்தடவையாக ஓய்வு வயதெல்லையை அதிகரிக்கும் செயற்பாட்டை சீனா முன்னெடுத்துள்ளது.
வயோதிபர்களின் சனத்தொகை குறித்தான பிரச்சினைக்கு சீனா முகம்கொடுத்துள்ளது. அத்துடன் ஓய்வூதியம் குறித்தான நிதி ஒதுக்கீடுகளில் காணப்படும் நெருக்கடிகளை குறைக்கும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீன உயர் சட்டவாக்க அமைப்பு இதற்கான பிரேரணையை அங்கீகரித்துள்ளது.
இதற்கமைய Blue-collar வேலையிலுள்ள பெண்களின் ஓய்வு வயதெல்லை 50 இலிருந்து 55 ஆகவும் White-collar வேலையிலுள்ள பெண்களின் வயதெல்லை 55 இலிருந்து 58ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆண்கள் ஓய்வுபெறும் வயதெல்லை 60 இலிருந்து 63 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.