மாதாந்த ஊதியம் ஒரு இலட்சம் ரூபாவை விட அதிக வருமானம் ஈட்டுபவர்களுக்கு வருமான வரி விதிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது. இந்நிலையில் குறித்த வரி விதிப்பில் தளர்வுகளை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதற்கமைய 150,000 ரூபாவை வருமானமாக ஈட்டுபவர்களுக்கு 14வீத வரி விலக்களிக்கப்பட்டுள்ளது.
200,000 ரூபா வருமான ஈட்டலுக்கு 20 வீத வரி விலக்கும் 300,000 வருமான ஈட்டலுக்கு 25 வீத வரி விலக்கும் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. வரி செலுத்துவோருக்கு இது மிகவும் தேவையான நிவாரணம் என அமைச்சர் அலி சப்ரி தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.