அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதமளவில் அனைத்து வாகன இறக்குமதி மீதான தடையை நீக்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
அந்நிய செலவாணி கையிருப்பு குறிப்பிடத்தக்களவு அதிகரித்துள்ளதுடன் ரூபாவின் பெறுமதி பலப்படுத்தப்பட்டுள்ளதாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.