அனுராதபுரம் முன்னாள் உதவி பொலிஸ் அத்தியட்சகர் சஞ்ஜீவ மஹாநாமவிற்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. அனுராதபுரம் நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.
இதற்கமைய சிறை வைக்கப்பட்டிருந்த அவர் 2 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டார்.
கடந்த 5ம் திகதி உத்திக பிரேமரத்னவின் வாகனம் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் தொடர்பிலான விசாரணைகளுக்கமைய குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் அனுராதபுரம் முன்னாள் உதவி பொலிஸ் அத்தியட்சகர் சஞ்ஜீவ மஹாநாம கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.