கிளப் வசந்தவின் கொலை தொடர்பில் கைதான முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அமல் சில்வா உள்ளிட்ட 12 சந்தேக நபர்களும் எதிர்வரும் 27ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் இன்றைய தினம் கடுவலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர். கடந்த மாதம் 29ம் திகதி முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அமல் சில்வா கைதுசெய்யப்பட்டிருந்தார்.
கிளப் வசந்த மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களுக்கு தங்குமிடம் உள்ளிட்ட உதவிகளை வழங்கிய குற்றச்சாட்டில் அவர் கைதானார்.